Sunday, March 7, 2010

> வெங்கட்பிரபுவின் புதிய கதை

நான்கு நண்பர்கள், ஜாலியாக சில சம்பவங்கள்... இந்த இரண்டையும் வைத்து கே‌ரியரை ஸ்மூத்தாக கொண்டு போய்க் கொண்டிருந்தார் வெங்கட்பிரபு. கோவாவில் ஏற்பட்ட சின்ன சறுக்கலால் இவரது நாலு நண்பர் ஃபார்முலாவுக்கு பாதிப்பு வந்துள்ளது.

கோவாவுக்குப் பிறகு தனது வழக்கமான ஃபார்முலாவில் கதையொன்றை தயார் செய்தார் வெங்கட்பிரபு. மூன்று ஹிட் கொடுத்தாச்சே, இனியாவது ஃபார்முலாவை மாற்றி சோலோ ஹீரோவுக்கு ட்ரை பண்ணலாமே என்று ஸ்பீடு பிரேக்கர் போட்டார் தயா‌ரிப்பாளர் அம்மா கி‌ரியேஷன்ஸ் சிவா. இவர்தான் சரோஜா படத்தின் தயா‌ரிப்பாளர். இவருக்குதான் அடுத்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார்.

வெங்கட்பிரபுவைப் பொறுத்தவரை சிவா வெறும் தயா‌ரிப்பாளர் மட்டுமல்ல. அதற்கும் மேலே. முதல் படம் சென்னை 28 வெற்றி பெறும் முன்பே வெங்கட்பிரபுவின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தவர் சிவா. அவர் பேச்சை தட்ட முடியாதே.

தனது வழக்கமான ஸ்கி‌ரிப்டை மூடி வைத்து பிரபல ஹீரோவுக்காக கோடம்பாக்க மசாலாவுடன் புதிய கதையொன்றை தயார் செய்திருக்கிறார் வெங்கட்பிரபு. இந்த மசாலாவுக்கு மஞ்சா குளிக்கப் போகும் ஹீரோ யார்? எல்லா ஹீரோவுமே பிஸியா இருக்காங்களே என்று தாடையை தடவிக் கொண்டிருக்கிறது வெங்கட்பிரபு அண்ட் டீம்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.