மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


விஸ்வரூபம் முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்.

5. கடல்
மணிரத்னத்தின் கடல் மூன்றாவது வார இறுதியில் 2.7 கோடியை மட்டுமே சென்னையில் வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 1.75 லட்சம். வார நாட்களில் 3.4 லட்சங்கள்.

4. வனயுத்தம்
சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் நான்கு நாட்களில் 7.9 லட்சங்களை மட்டுமே வசூலித்து பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

3. ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் (ABCD)
இந்தியில் இதுவரை 41 கோடிகளை வசூலித்திருக்கும் இப்படம் தமிழில் வெளியான முதல் மூன்று தினங்களில் 7.7 லட்சங்களை மட்டுமே வசூலித்து தோல்வியை பதிவு செய்துள்ளது.

2. சில்லுன்னு ஒரு சந்திப்பு
மகா மொக்கையான இந்தப் படம் முதல் நான்கு நாட்களில் 10.3 லட்சங்களை மட்டுமே வசூலித்து தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறது.

1. விஸ்வரூபம்
தொடர்ந்து அதே முதலிடம். முதல் நான்கு தினங்களில் நான்கு கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் பதினொரு தினங்களில் சென்னையில் 8.2 கோடிகளை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 2.2 கோடி என்றால் வார நாட்களில் 1.9 கோடி. வசூல் மிக வேகமாக இறங்கி வருவதையே இது காட்டுகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.