
இந்த ஆண்டின் 4 சக்கர வாகனங்களில் அதிக நம்பிக்கை பெற்ற பிராண்டாக டாடா நானோ TATA Nano தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2013-ஆம் ஆண்டில் மக்களின் அதிக நம்பிக்கையை பெற்ற பிராண்ட் குறித்த ஆய்வை டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி அமைப்பு நடத்தியது. இதற்கான கருத்துக்கணிப்பு 16 நகரங்களில் 2,505 பேரிடம் நடத்தப்பட்டு 30 லட்சம் புள்ளிவிவரங்கள் திரட்டப்பட்டன. 19 ஆயிரம் பிராண்டுகள் குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
இறுதியில் 211 பிரிவுகளில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற 1100 இந்திய பிராண்டுகள் பட்டியல் வெளியிடப்பட்டது. கருத்துக்கணிப்பில் தொடக்கம் முதலே டாடா நானோ அதிக புள்ளிகளை பெற்றது. இந்திய சாலை போக்குவரத்து சோதனைகளுக்கு உகந்த தரம், விலைக்கு ஏற்ற மதிப்பு, 4 ஆண்டுகள்/60 ஆயிரம் கிமீ வாரண்டி போன்ற அம்சங்கள் காரணமாக மக்களின் நம்பிக்கையை பெற்ற பிராண்டாக டாடா நானோ தேர்வாகியுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.