மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய்யை இயக்குவாரா K.V.ஆனந்த்?

மாற்றான் தோற்றாலும் கே.வி.ஆனந்த் என்ற பெயருக்கு இன்னும் டிமாண்ட் இருக்கிறது. ர‌ஜினியை இயக்குகிறார் என்று பேசப்பட்டவர் உண்மையில் இயக்கப் போவது விஜய்யை.

முதலில் ஸ்கி‌ரிப்ட். அது முடிந்த பிறகுதான் ஹீரோ யார்னு தீர்மானிப்பேன் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார் ஆனந்த். சில பத்தி‌ரிகைகள் ஆனந்தின் அடுத்த புரொடியூசர் என்று சில‌ரின் பெயர்களை வெளியிட, ஹீரோவை மட்டுமல்ல, புரொடியூசரையும் ஸ்கி‌ரிப்ட் முடிந்த பிறகுதான் செலக்ட் பண்ணுவேன் என பேச வேண்டியதாயிற்று.

ஸ்கி‌ரிப்ட் இன்னும் முடியவில்லை. என்றாலும் விஜய்யை ஆனந்த் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனந்த் சொன்ன ஒன் லைன் விஜய்யை கவர்ந்ததாகவும் ‌ஜில்லா படத்துக்குப் பிறகு ஆனந்தின் படத்தில் விஜய் நடிப்பார் எனவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

தலைவா படத்தில் நடித்து வரும் விஜய் மே மாதம் முதல் சௌத்‌ரி தயா‌ரிப்பில் நேசன் இயக்கும் ‌ஜில்லா படத்தில் நடிக்கிறார். அதையடுத்து ஆனந்தின் படம்.

விரைவில் ஸ்கி‌ரிப்டை முடித்து ஆனந்தே இந்தத் தகவலை உறுதி செய்வார் என்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.