2013ம் ஆண்டில் மக்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரர் என்ற விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களை வருடம் தோறும் ரசிகர்களே இணையதளம் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யும் முறையை ஐசிசி 2010ம் ஆண்டு அறிமுகம் செய்தது.
2013ம் ஆண்டின் மக்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரர் என்ற விருதுக்கு ஆஸ்திரேலியா வீரர் மைக்கேல் கிளெர்க், இங்கிலாந்து வீரர் குக், தென் ஆப்ரிக்கா வீரர் ஏ.பி. டிவிலியர்ஸ், இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் டோனி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதால் 2013ம் ஆண்டின் மக்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரர் என்ற விருது அவருக்கு கிடைத்துள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்த விருதை பெரும் 2வது இந்திய வீரர் என்ற பெருமை தோனிக்கு கிடைத்துள்ளது. இந்த விருது கிடைத்தது தமக்கு எல்லையற்ற உற்சாகமும், மிகுந்த மன திருப்தியும் அளிப்பதாக டோனி கருத்து தெரிவித்துள்ளார். இந்த விருது அறிமுகம் செய்யப்பட்ட பிறகு 2011ம் ஆண்டு சச்சினுக்கும் 2012ம் ஆண்டு இலங்கை வீரர் குமார் சங்ககராவுக்கும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.