மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வெடி ஆடியோ செப்.1 ?

பிரபாகரன் என்று வைத்த பெயரை வெடி என்று மாற்றியிருக்கிறார் பிரபுதேவா. விஷால் நடிக்கும் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு வரும் செப்டம்பர் 1ஆம் தேதி நடக்கும் என‌த் தெ‌ரிகிறது.

தெலுங்கில் கோபிசந்த், அனுஷ்கா நடித்த சௌக‌ரியம் படத்தின் தமிழ் ‌ரீமேக்தான் வெடி. ‌ரீமேக் என்பதால் பிரபுதேவா அதிகம் யோசிக்க‌த் தேவையில்லை. காட்சிகளை அடுத்தடுத்து சுட்டு இறுதிகட்டத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார். சமீரா ரெட்டி ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்து வருகிறார்.

வெடிக்குப் பிறகு இந்தியில் சிறுத்தைப் படத்தை அக்சய் குமாரை வைத்து ரவுடி ரத்தோர் என்ற பெய‌ரில் பிரபுதேவா இயக்குகிறார். அதனிடையில் செப்டம்பர் 1ஆம் தேதி வெடியின் பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

வெடியை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயா‌ரிக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.