மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பூஜா - சீமான் படத்தில் ?

தமிழ்... தமிழ் என்று பேசும் சீமான் சிங்களவரான பூஜாவுக்கு எப்படி தனது தம்பி படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார்? ஜெயராம் வீட்டை சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் சூறையாடிய போது கேட்கப்பட்ட கேள்வி இது.

இந்த கேள்விக்கான பதில் கிடைக்காத நிலையில் மீண்டும் ஒரு குண்டை கொளுத்தி வீசியிருக்கிறார்கள். அதாவது சீமானின் புதிய படத்தில் நடிக்கிறாராம் பூஜா.

நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக கட்டி எழுப்பும் முயற்சியில் இருக்கிறார் சீமான். இதற்கு நடுவில் படமும் இயக்குகிறார். தயா‌ரிப்பவர் தாணு.

ஸ்கி‌ரிப்ட் தயாராக இருக்கிறது. இருந்தும் சமூகப் பணி காரணமாக சீமான் இன்னும் படப்பிடிப்புக்கு கிளம்பவில்லை. விரைவில் தொடங்கப்பட இருக்கும் இந்தப் படத்தில் பூஜா முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

நான் கடவுள் படத்துக்குப் பிறகு துரோகி என்ற ஒரேயொரு படத்தில்தான் நடித்து வருகிறார் பூஜா. சீமானின் படத்தில் நடித்தால் அது இரண்டாவது படம். திறமையான நடிகை. இன ‌ரீதியிலான கேள்விகளை பொருட்படுத்தாமல் சீமான் வாய்ப்பு தர வேண்டும் என்பதே நியாயமானவர்களின் எதிர்பார்ப்பு.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.