 சமீபமாக பெயர் சொல்லும் எந்தப் படமும் விக்ரமுக்கு அமையவில்லை. மஜா தோல்வி, இரண்டு வருடம் உழைத்த பீமா ப்ளாப்.. இதையெல்லாம் சரி செய்யும் என்று நினைத்த கந்தசாமியும் காலைவார, முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்ட நிலை.
சமீபமாக பெயர் சொல்லும் எந்தப் படமும் விக்ரமுக்கு அமையவில்லை. மஜா தோல்வி, இரண்டு வருடம் உழைத்த பீமா ப்ளாப்.. இதையெல்லாம் சரி செய்யும் என்று நினைத்த கந்தசாமியும் காலைவார, முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்ட நிலை.இந்நேரம் செல்வராகவன் ஒரு கதையை சொல்ல, அதில் மெய் மறந்த சீயான் எதையும் யோசிக்காமல் லடாக் கிளம்பிவிட்டார் படப்பிடிப்புக்கு. இந்த திடீர் ட்ரிப்பால் கடுப்பில் இருக்கிறார் தயாரிப்பாளர் மோகன் நடராஜன்.
மணிரத்னத்தின் ராவண் படத்துக்குப் பிறகு மோகன் நடராஜன் தயாரிப்பில் விக்ரம் குமார் இயக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார் விக்ரம். நடுவில் செல்வராகவன் வர, கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு லடாக் பறந்துவிட்டது பட்சி.
அதிர்ச்சியான மோகன் நடராஜன், விக்ரம் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார். விரைவில் பஞ்சாயத்து மணி ஒலிக்கலாம்.
 

 




0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.