
முதல்வருக்கு நடந்த பாராட்டுவிழா நிகழ்ச்சியில் அஜித் பேசியதை தமிழினத்துக்கு எதிராக அஜீத் பேசியதாக திரித்துக் கூறி வருகிறார் ஜாக்குவார் தங்கம். சாதி, இனம், மொழி என்று அவர் பிரச்சனையை திசை திருப்பியும் வருகிறார்.
ஜாக்குவார் தங்கம் வீடு தாக்கப்பட்டது தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அஜீத்தின் மேனேஜர், உதவியாளர், ரசிகர் மன்ற நிர்வாகி ஆகியோரும் அடங்குவர். அஜீத்தின் பெயரை வழக்கில் சேர்க்க ஜாக்குவார் தங்கம் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
இந்நிலையில் தனது வீடு தாக்கப்பட்டது தொடர்பாக அஜீத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி நடிகர் சங்கத்திடம் பிராது கொடுத்தார் ஜாக்குவார் தங்கம். இதனைத் தொடர்ந்து அஜீத்துக்கு விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.