மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> MUSIC DNA : புதிய பைல் பார்மட்

பாடலைக் கேட்கும் போதே அதன் வரிகளைப் படிக்க, வீடியோ கிளிப் பார்க்க, இசையை ஒலிக்க, படங்களைக் காட்ட எனப் பல்வேறு பரிமாணங்களுடன் அடுத்த பாடல் பைல் வரப் போகிறது. எம்பி3 பாடல் பைல் பார்மட்டை உருவாக்கியதில் பின்னணியில் இருந்த சில வல்லுநர்களால் இந்த புதிய பார்மட் கிடைக்க இருக்கிறது. இதன் பெயர் மியூசிக் டி.என்.ஏ (MusicDNA).

நார்வே நாட்டைச் சேர்ந்த அப்ளிகேஷன் டெவலப்பர் டாக்பின் பாச் என்பவரால் இந்த புதிய வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இவர் 1993ல் முதல் எம்பி3 பிளேயரை உருவாக்கியவர். பல மியூசிக் நிறுவனங்கள் இந்த புதிய பைல் வடிவமைப்பில் ஆர்வம் காட்டி ஒப்பந்தம் மேற்கொள்ள முன் வந்துள்ளனர்.

ஒரு பாடல் பைலில், பாடல் சார்ந்த தகவல்கள் 32 ஜிபி வரை இணைக்கலாம். ஒரு பைலில் மாற்றம் ஏற்படுத்துகையில், அந்த பைல் எந்த கம்ப்யூட்டரில் இருந்தால், இணைய இணைப்பில் அது அப்டேட் செய்யப்படும். வாடிக்கையாளர்களுக்கு வெறும் இசையை மட்டும் தராமல், இசை சார்ந்த மற்ற தகவல்களையும் தர வேண்டும் என்ற வேட்கையே இந்த புதிய பார்மட் உருவானதற்கு அடிப்படை காரணமாகும்.


எழுதியவர் : KarthiK
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.