மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஆபத்து மன்மதனுக்கு ?

உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைவிடுத்து கோடம்பாக்கத்தில் என்ன நடக்கிறது என்று பைனாகுலர் வைத்துப் பார்க்கும் கட்சி ஒன்று தமிழகத்தில் உள்ளது. சொல்லாமலே பு‌ரிந்திருக்குமே, இந்து மக்கள் கட்சி.

பாப்புலரான நபர்கள், விஷயங்களில் மட்டும் போராட்டம் நடத்தி தனது பெயரை மெயி‌ண்டெய்ன் செய்யும் இந்தக் கட்சி கமல்ஹாசனுக்கும், த்‌ரிஷாவுக்கும் கண்டன கடிதம் அனுப்பியுள்ளது.

மன்மதன் அம்பு படத்தில் கமலும், த்‌ரிஷாவும் சேர்ந்து பாடும் பாடல் ஒன்று உள்ளது. இதில் வரும் சில வார்த்தைகள் இந்து தெய்வங்களான அரங்கநாதனையும், வரலட்சுமியையும் கொச்சைப்படுத்துவதாக உள்ளதாம். இந்த வார்த்தைகளை நீக்காவிட்டால்... அதற்குப் பிறகுதான் உங்களுக்கே தெ‌ரியுமே... போராட்டம் மறியல்...

அரங்கநாதா நீதான் காப்பாற்ற வேண்டும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.