
எந்திரன் படம் இந்திய திரையுலகில் 100 கோடி வசூலை கடந்த ஆறு திரைப்படங்களில் ஒன்று. இந்திய அளவில் வசூலில் 3இடியட்ஸுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.
ஆனால் இந்த லாபத்தை சரிசமமாகப் பிரித்துக் கொடுக்காமல் திரையரங்கு உரிமையாளர்களை நஷ்டத்தில் தள்ளிவிட்டது சன் பிக்சர்ஸ் என்ற குற்றச்சாற்று முன்பே எழுந்தது. ஆட்சி மாறியதால் ஆறு பேர் இதனை புகாராகவே போலீஸிடம் தந்திருக்கிறார்கள்.
எந்திரன் மிகப் பெரிய வெற்றியை பெற்றதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் மிகப் பெரிய தொகைக்கு எந்திரனை வாங்கியதால் பலரும் நஷ்டத்தை சந்திக்க நேர்ந்தது. இதுதான் இப்போது பிரச்சனையை கிளப்பியுள்ளது. இந்த புகார் எந்திரன் வசூல் குறித்த மேலும் பல அதிர்ச்சி தகவல்களை வெளிக்கொண்டு வரும் என்கிறார்கள்.
enthiran is a mokkai flop movie
ReplyDeleteEndiran was a Flop Movie that's the reason Theatre Owners are claiming back their amount
ReplyDelete