
சல்மான்கானின் தபாங் தமிழ் ரிமேக்கான ஒஸ்தி வேகமாக வளர்ந்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து இப்போதே பிரமிப்பாக பேசுகின்றனர்.
ஒஸ்தி தொடக்க விழாவில் சல்மான்கானின் தம்பியும், தபாங் தயாரிப்பாளருமான அர்பாஸ்கான் கலந்து கொண்டார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எப்படியும் சல்மான்கானை பங்கு பெற செய்தாக வேண்டும் என விரும்புகிறாராம் சிம்பு. சல்மான் தனது சம்மதத்தை தெரிவித்தால் விழாவை பிரமாண்டப்படுத்தி அசத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் ஒரு பாடலை எழுதி பாடவும் செய்திருக்கிறார் சிம்பு.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.