மங்காத்தா ஆடியோ எப்போது வெளியிடப்படும் என்பதை இன்று சோனி நிறுவனம் அறிவிக்கிறது. ஆடியோ வெளியிடும் அன்று படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்படும்.
யுவன் இசையில் தயாராகியிருக்கும் மங்காத்தா பாடல்களுக்கு அமோக எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். இதில் விளையாடு மங்காத்தா என்ற பாடலை மட்டும் விளம்பரத்துக்காக ஏற்கனவே வெளியிட்டனர். பாடல் செம ஹிட்.
படத்தில் இடம்பெறும் மூன்று டூயட் பாடல்களில் ஒரு பாடலை கிருஷ், சுசித்ரா பாடியுள்ளனர். இன்னொரு பாடலை பாடியிருப்பவர்கள் எஸ்பிபி சரண், பவதாரிணி. மூன்றாவது பாடலை யுவன் ஷங்கர் ராஜாவே பாடியிருக்கிறார். உடன் பாடியிருப்பது மதுஸ்ரீ.
ஒரு பாடலில் படத்தின் தயாரிப்பாளர் துரை தயாநிதியின் மனைவியும் பாடியிருக்கிறார். அவர் சினிமாவில் பாடுவது இதுவே முதல்முறை.
படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியிருக்கும் சோனி நிறுவனம் ஆடியோ வெளியீடு எப்போது என்று இன்று அறிவிக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.