
டான் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார். பாலிவுட்டை இந்தச் செய்தி பரபரப்படைய வைத்திருக்கிறது. ஷாருக்கான் நடித்த டான் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது டான் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர்களே ரசிகர்களை அதிகம் கவாந்துள்ளன.
இந்தப் படத்தில் ஹிருத்திக்ரோஷன் வில்லனாக நடிப்பதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை படத்தின் இயக்குனர் ஃபாரன் அக்தர் மறுத்துள்ளார். டான் 2ல் ஹிருத்திக் நடிப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை. பெர்லினில் படப்பிடிப்பு நடந்த போது நட்புக்காகதான் அங்கு வந்தார். ஆனால் சொல்வதற்கில்லை... விரைவில் நாங்கள் ஒன்றாக பணிபுரியலாம் என கழுவுற மீனில் நழுவுற மீனாக பதில் சொல்லியிருக்கிறார்.
ஹிருத்திக் நடிப்பதை சஸ்பென்சாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி மறுப்பு தெரிவித்திருக்கிறார் என்று இப்போதும் ஹிருத்திக் டான் 2ல் நடிப்பதை நம்பிக் கொண்டிருக்கிறது பாலிவுட்.
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
ReplyDeletehttp://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html