இந்தியில் வெளியான தேஷ் துரோகி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. தாதாக்கள் பற்றிய கதையான இதில் தீவிரவாதி அபுசலீமை குறித்த காட்சிகள் இடம் பெறுகின்றன. அபுசலீம் இருந்தால் அவனது காதலி மோனிகா பேடியை தவிர்க்க முடியாதே.
மோனிகா பேடி வேடத்தில் நடிக்க பலரை அணுகியும் யாரும் நடிக்க ஒப்புக் கொள்ளாத நிலையில் ப்ரியாமணியின் டோர் பெல்லை அழுத்தியிருக்கிறார்கள். தீவிரவாதியின் காதலி வேடமா? அதுவும் உண்மையான காதலியாகவா? நோ சான்ஸ். அப்படி நடிக்க விருப்பமில்லை என திருப்பி அனுப்பியிருக்கிறார்.
அதே நேரம் ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பை படத்தின் இரண்டாம் பாகத்தில் இதே மோனிகா பேடி வேடத்தை சோனாக்சி சின்கா செய்கிறார். எப்படி?
அதில் அபுசலீமாக நடிப்பது அக்சய் குமார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.