ஏற்கனவே கிளவுட் நைன் கம்பெனி சார்பில் படங்களை தயாரித்து வரும் தயாநிதி அழகிரி மேலும் ஒரு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். Meeka என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த கம்பெனி வெற்றிமாறனுடன் இணைந்து முதல் படத்தை தயாரிக்கிறது.
வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் மணிகண்டன் சித்தார்த் நடிக்கும் தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தை இயக்குகிறார். கதை, திரைக்கதை, வசனம் வெற்றிமாறன் என கூறப்படுகிறது. இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட்ஸ் நிறுவனமும் தயாநிதி அழகிரியின் Meeka-வும் இணைந்து தயாரிக்கிறது.
படத்தயாரிப்பு போக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது போன்ற வேறு பல செயல்பாடுகளிலும் இந்த நிறுவனம் ஈடுபடும் என தயாநிதி அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் கிளவுட் நைன் வழக்கம் போல படங்களை தயாரிக்கும் எனவும் கூறியுள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.