விஜய் சுருட்டுப் பிடிக்கும் துப்பாக்கி விளம்பரத்தைப் பார்த்த போது, என்ன ஸ்டைலாக சுருட்டுப் பிடிக்கிறார் என்று தோன்றுவதற்கு முன்னால் புகை எதிரி அன்புமணி ராமதாஸ் சார்பில் பாமக போராட்டத்தை தொடங்குமே என்றுதான் எண்ணம் வந்தது. கரெக்ட். பாமக தொடங்கிவிட்டது.
பாமக-வின் சைடு கிளையான பசுமைத் தாயகம் சார்பில் சௌமியா அன்புமணி போராட்ட பெல்லை அடித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் இந்த விளம்பரம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டிருக்கிறார்.
விளம்பரங்களில் புகைப்பிடிக்கும் காட்சியை வைப்பது குற்றம். அது தெரிந்தும் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர். இது சட்டப்படி குற்றம். நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என பசுமைத் தாயகம் சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
பொட்டி தூக்குவதில் பாமக கில்லாடி என்பதால் துப்பாக்கி யூனிட் உஷாராக இருப்பது நல்லது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.