சிம்பு - நயன்தாரா ஜோடி சேர்கிறார்கள் என்றதும் ஹன்சிகாவின் ட்விட்டர் பக்கத்தில் கேள்விகளால் துளைத்துவிட்டார்கள் அடுத்தவர்களின் பர்சனல் பக்கத்தை புரட்டும் ஆர்வலர்கள்.
சினிமா ஒரு தொழில், அதில் சிம்பு தொழில்முறையில் யாருடனும் சேர்ந்து நடிக்கலாம், நான் இன்னும் சிம்புவை காதலிக்கிறேன் என்று தெளிவாக ஹன்சிகா சொல்லியும் கல்லில் நார் உரிக்கும் வேலையை சிலர் தொடர்ந்ததால் ட்விட்டர் பக்கம் வருவதையே தவிர்த்தார் ஹன்சிகா.
காலம்தானே எல்லாவற்றுக்கும் மருந்து. சிம்பு - நயன்தாரா விவகாரம் சூடு தணிந்த நிலையில் மீண்டும் ட்விட்டருக்கு வந்திருக்கிறார். பட், ஒரு நிபந்தனை. ஹன்சிகாவின் படங்கள் குறித்து மட்டுமே கேட்கலாம், பேசலாம். பர்சனல் விஷயங்கள் பேச கண்டிப்பாக அனுமதியில்லை.
இந்த ஒரு நிபந்தனைக்கே பாதி பேர் ஓடிப் போயிருப்பார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.