மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஸ்ரீனிவாஸ் இசையை ரஹ்மான் வெளியிடுகிறார்.

பாடகர் ஸ்ரீனிவாஸ் முதல்முறையாக இசை அமைத்திருக்கும் படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார். அதற்கான விழா இம்மாதம் 21 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.

அரவான் படத்தில் பாடகர் கார்த்திக் இசையமைப்பாளரானது போல் கங்காரு படத்துக்கு இசையமைத்ததன் மூலம் பாடகர் ஸ்ரீனிவாஸும் இசையமைப்பாளராகியிருக்கிறார். கங்காரு படத்தை இயக்கியிருப்பவர் சிந்துசமவெளியை இயக்கிய சாமி.

கங்காரு கதை அசிஸ்டெண்ட் டைரக்டர் ஒருவருக்கு உரியது. அவரிடம் இரண்டு லட்சம் விலை பேசி கதையை வாங்கிய சாமி ஒன்றரை லட்சமே தர முடியும் என பேரம் பேசி அதையும் தராமல் ஒரு லட்சத்துக்கு கீழிறங்கி, இயக்குனர்கள் சங்கத்தில் பஞ்சாயத்து நடந்த போது எழுபத்தைந்தாயிரம்தான் தர முடியும் என ஒப்புக் கொண்டு அதையும் தராமல் இழுத்தடித்தது... ஒரு கட்டத்தில் ஃபாலோ செய்வது வெறுத்துப் போய், அந்த எழுபத்தைந்தாயிரமாவது அசிஸ்டெண்ட் டைரக்டருக்கு கிடைத்ததா என்பது தெரியவில்லை.

அர்ஜுனா, வர்ஸா நடித்திருக்கும் இந்தப் படம் அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தியதாம். வரும் 21 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் முதல் சிடியை ரஹ்மான் வெளியிடுகிறார். இதன் கதை விவாதத்தில் எழுத்தாளர் ஜெயமோகனும் சில நாள்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.