பன்ச் டயலாக் பேசுவதில்லை என்ற முடிவை தொடர்ந்து படங்களில் கடைபிடித்து வருகிறார் அஜீத். ஆனால் சாதாரணமாக அவர் பேசும் வசனங்களை மீடியாவும், ரசிகர்களும் தொடர்ந்து பேசி அவற்றை பன்ச் வசனமாக்கிவிடுகிறார்கள்.
வீரம் படத்தின் இரண்டாவது டீஸரை வெளியிட்டிருக்கிறார்கள். நல்லவன்னு சொல்வாங்க நம்பாதீங்க... கெட்டவன்னு சொன்னாலும் திட்டாதீங்க... என்ற பாடல் வரிகளின் பின்னணியில் அஜீத்தின் பல காட்சிகளை தொகுத்திருக்கிறார்கள். டீஸரின் இறுதியில், என்ன நான் சொல்றது? என்ற அஜீத்தின் கேள்வியுடன் டீஸர் முடியும். என்ன நான் சொல்றது? என்ற வசனத்தை படத்தில் அடிக்கடி பயன்படுத்துகிறார் அஜீத். முக்கியமான விஷயங்களை அஜீத் பேசி முடித்ததும் இந்த வசனத்தை சொல்வதாக வைத்திருக்கிறார்களாம்.
இந்த பாணியை தொடர்ந்து பயன்படுத்துகிறவர் மோகன்லால். எல்லோரும் இவடத்தன்ன காணுமல்லோ (எல்லோரும் இங்கேதானே இருப்பீங்க இல்லையா), காரணம் நீ குட்டியாணு (காரணம் நீ சின்ன குழந்தை) என்பது போன்ற வசனங்களை அவர் தனது படங்களில் பயன்படுத்தி, சாதாரண வசனங்களான இவற்றை பன்ச் வசனங்களாக மாற்றினார்.
வீரம் படத்தில் அதேபோல் என்ன நான் சொற்தை பயன்படுத்தியிருக்கிறாராம் அஜீத்.
சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.