மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வரவு செலவுத்திட்டத்தில் 52 வீதம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று அமைச்சர்களுக்கு ஹரின் பெர்னாண்டோ.

வரவு செலவுத்திட்டத்தில் 52 வீதம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று கூறினார்.

வரவு-செலவு திட்டத்தின் 48 வீதம் மட்டுமே 105 அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட குழுவின் விருப்பப்படியே சகல விடயங்களும் நடப்பதை இது காட்டுகின்றது. இப்போதாவது மக்கள் புத்திசாலித்தனமாக சிந்திக்க வேண்டுமென பெர்னாண்டோ கூறினார்.

பாடசாலை சீருடைகளை வழங்க 1400 மில்லியன் ரூபா போதுமானது. எனினும், இந்த அரசாங்கம் 2000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இதிலிருந்து இந்த அரசாங்கம் இவ்வருடம் பாடசாலை சீருடை விநியோகத்தில் 600 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளது. இந்த வெளிப்படையான மோசடிக்கு கல்வியமைச்சரும் கல்வி சேவை அமைச்சரும் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டும்.

இது தொடர்பில்  இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நான் முறையிடவுள்ளேன் என அவர் கூறினார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.