முன்னுரை:
வாழ்க வளமுடன் ! பொறுமையாக இப்பதிவை முழுவதும் படித்து ( வாசித்து ) கருத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள். வாழ்க வளமுடன் !
1) வாழ்க வளமுடன் ! அருட்பேரா ற்றல் கருணையினால் உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைச்செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று மேலோங்கி வாழ்வோம். வாழ்க வளமுடன் !
2) வாழ்க வளமுடன் ! அருட்பேரா ற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும், பாதகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமையுமாக. வாழ்க வளமுடன் !
பின்னுரை::
ஏசுகிருஸ்த்துவும், அல்லாவும், இந்து கடவுளர்களும் பேரா ற்றல் உடையவர்களாக இருப்பதால் தான், அவர்களை நாம் வணங்குகின்றோம், வேண்டுகின்றோம், பிரா ர்த்திக்கின்றோம், பணிகின்றோம், இறைஞ்சுகின்றோம், மண்டியிடுகிண்றோம் நம்மையெல்லாம் காக்க. யார் எந்த கடவுளை வணங்கினாலும் என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்று என்று பலரும் பலவாறாய் வணங்குகிறோம்.. அதன் கருத்துத் தான் இந்த நல்வாக்கு. நல்லவைகளை, நல்ல வார்த்தைகளை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் நல்லதாகவே நடக்கும் என்பது பெரியோர்களின் அருள்வாக்கு. நம்பிக்கையில் தானே இறைவனை வணங்குகிறோம் நல்லவைகள் நடக்க வேண்டுமென்று. சொல்லுங்கள் நல்லதாகவே நடக்கும். நீங்கள் யாரை சந்தித்தாலும், யாரிடம் உரையாடினாலும் " வாழ்க வளமுடன் " என்னும் இவ்வார்த்தையே முதலில் வருகின்ற வார்த்தையாக இருக்கட்டும். அதே போல உங்களை யார் சந்தித்தாலும் இதுவே முதலில் வருகின்ற வார்த்தையாக இருக்கட்டும். அடுத்தது யாரை ஆசிர்வதித்தாலும், விடைக்கொடுத்தாலும் மேற்காண்ட அருள்வாக்கை தவறமல் முழுமையாக அனைவரும் கேட்கும்படியாகவே உச்சரியுங்கள் ( சொல்லுங்கள் ). நிச்சியமாக நலமாக, வளமாக வாழ்வீர்கள். மேற்கண்ட சிறிய நல்வாக்கு செய்திக்கு, எவ்வளவு பெரிய பின்னுரை தேவைப் படுகிறது பார்த்தீர்களல்லவா அத்தனை சக்தி வாய்ந்தது அந்த வாழ்த்து. இது நமக்காக சொல்லப் பட்ட அருள்வாக்கு. தொடர்ந்து சொல்லுவோம். நலமாய், வளமாய் வாழ்வோம். வாழ்க வளமுடன் !
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.