வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் `எந்திரன்' படக்கதை என்ன? என்பது வெளியே தெரிந்து விட்டது.
டைரக்டர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி- ஐஸ்வர்யாராய் நடிக்கும் `எந்திரன்' படப்பிடிப்பு மள, மள வென நடந்து வருகிறது.
இந்தியாவின் அதிக பட்ச, பிரமாண்ட பட்ஜெட் படமான `எந்திரன்' படக் கதையை எவ்வளவோ ரகசியமாக பாதுகாத்து வந்தும் விஷயம் வெளியே கசிந்து விட்டது.
`எந்திரன்' படக்கதை இது தான்!
ரஜினி ஒரு விஞ்ஞானி. அவர் புதுவகையான ஒரு `ரோபோ'வை கண்டு பிடிக்கும் முயற்சியில் இருக் கிறார்.
வரும் 2,200ம் ஆண்டில் `ரோபோ' எப்படி இருக்கும்ப அது என்னவெல்லாம் செய்யும் என்பதை கற் பனையாக வைத்து, முடி வில் அவர் ஒரு எந்திர மனிதனை பிரமிக்கும் வகையில் கண்டு பிடித்து விடுகிறார்.
இதன் மூலம் அவர் உலகிலேயே மிகவும் தலை சிறந்த விஞ்ஞானி என்ற பட்டத்தை பெறுகிறார்.
ரஜினி கண்டுபிடித்த `ரோபோ' எந்திரமும் ரஜினி போலவே உருவம் கொண் டது என்பது படத்தின் விசேஷ அம்சமாகும்.
இதன் மூலம் உலக நாடுகளில் ரோபோ தயாரிப்பு விஞ்ஞானிகளில் ரஜினி தவிர்க்க முடியாத மாபெரும் விஞ்ஞானியாக புகழ் பெற்று விடுகிறார்.
இதற்கிடையே ரஜினி- ஐஸ்வர்யாராய் இடையே காதல் மலர்கிறது. இருவரும் ஆடிப்பாடி மகிழ் கின்றனர். இந்த நிலையில் ரஜினி கண்டு பிடித்த `ரோபோ' வாலேயே அவரது காதலுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.
ஆமாம்! அந்த அரிய வகை ரோபோவை ஒரு வில்லன் கடத்திக் கொண்டு போய் விடுகிறான்.
வில்லன் கையில் சிக்கிய `ரோபோ' அவன் இஷ்டப்படி நடக்க ஆரம்பித்து விடுகிறது. ரஜினி பேச்சை கேட்க மறுத்து விடுகிறது.
இதன் மூலம் ஐஸ்வர்யாராய் காதல் உள்பட ரஜினி வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினையாகி விடு கிறது.
ஒரு வழியாகப் போராடி, முடிவில் அந்த ரோபோவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கிறார் ரஜினி.
இந்தப் படத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் சந்திப்பு மற்றும் காதல் காட்சிகள் மட்டுமே `அவுட்டோர்' படப்பிடிப்புகளில் நடத்தப் படுகிறது.
எந்திரனின் `ரோபோ' ஏற்கெனவே தயாராகி விட்ட நிலையில் அதனை மும்பையில் ஒரு பங்களாவுக்குள் ரகசியமாக அடைத்து வைத்திருக்கிறார்கள்.
`ரோபோ'வுக்கு `அவுட் டோர்' சூட்டிங் கிடையாது. இந்த `ரோபோ' சிறியவர் முதல் பெரியவர் வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பல வகை அட்டகாசங்களைச் செய் கிறது.
`ரோபோ' வில்லன் கையில் கிடைக்கும் போது `இடைவேளை' விடுகிறார்கள். இதன் பின்னர் வில்லன் சொல் படி ஆடும் `ரோபோ' ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட காமெடி ரகளை பண்ணுகிறது.
ரோபோவும், ஐஸ்வர்யாராயும் ஆடிப் பாடும் ஒரு காதல் காட்சி `கம்ப்ïட்டர் கிராபிக்ஸ்' யுக்தியில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கப்போகிறது.
இந்தப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இது வரைஇல்லாத அளவுக்கு இசையில் `காமெடி' கலந்து பல புதுமையான டிïன்களை உருவாக்கி உள்ளார்.
இதற்கிடையே எண்ணூர் துறை முகத்தில் ஐஸ்வர் யாராயை ரோபோ காதலிக்கும் காமடி காட்சி கள் படமாக்கப்பட்டு உள் ளன. `ரோபோ' வின் காதல் தொல்லை பற்றி விஞ்ஞானி ரஜினியிடம் ஐஸ்வர்யா ராய் புகார் செய்கிறார். உடனே ரஜினி ரோபோவிடம் ஒழுங்காக இரு இல்லா விட்டால் பிரிச்சு போட்டுருவேன் என்று எச்சரிக்கப்பட்டது போன்று அக் காட்சிகள் எடுக்கப்பட்டன.
குலுமனாலியில் ரஜினி- ஐஸ்வர்யாராய் காரில் காதல் செய்வது போல் காட்சிகள் விரைவில் படமாக்கப்படுகின்றன. இதற்காக ரூ.90 லட்சம் செலவில் புதிய `பென்ஸ்' கார் வாங்கப்பட்டு உள்ளது.
எந்திரன் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் உருவாகிறது. `ரோபோ' செய்யும் சேஷ்டைகளுக்கு மொழியே தேவையில்லை என்பதால் உலக அளவில் இந்தப்படம் மிகப் பெரிய வசூல் சாதனையை ஏற் படுத்தும் என தெரிகிறது.
`எந்திரன்' அடுத்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் உருவாகி வருகிறான்.எழுதியவர் : கார்த்திக்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.