மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய்யின் அரசியல் பாட்டு

களத்துல இறங்குவதென முடிவெடுத்துவிட்ட விஜய் தனது படத்தின் பாடல்களிலும் அரசியல் ’பஞ்ச்’ அடிக்க தொடங்கிவிட்டார்.
எம்.ஜி.ஆர். ஸ்டைலுக்கு தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதில் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார் விஜய். அதன் முதல் ஸ்டெப்தான் எம்.ஜி.ஆர் பட தலைப்புகளாக தேடிப்பிடிப்பது. ‘வேட்டைக்காரன்’ , ‘உரிமைக்குரல்’ என பட்டியல் நீளத் தொடங்கியிருக்கும் நிலையில் பாடல்களிலும் புரட்சித்தலைவர் பாணி இருக்க வேண்டுமென கவிஞர்களுக்கு அன்புகட்டளையிட்டுள்ளாராம்.

அரசியல், தத்துவம், புத்திமதி எல்லாம் கலந்து கதம்பம் கட்டிய பாடல் ஒன்றை விஜய்க்காக எழுதியுள்ளார் கபிலன். ‘வேட்டைக்காரன்’ படத்தில் அப்பாடலை பயன்படுத்துகிறார் விஜய்.

“வறட்டி தட்டும் சுவத்துல
வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டுப்போட்டு
கருத்துப்போச்சு நகமடா
புள்ள தூங்குது இடுப்புல
பூனை தூங்குது அடுப்புல
நம்மநாட்டு நடப்புல
யாரும் இதைத் தடுக்கல”

என்ற பாடலுக்கு எம்.ஜி.ஆர் ஸ்டைலிலேயே ஆடி நடிக்கிறாராம் இளையத்தளபதி.

புலி மாதிரி கோடு போட்டுக்கொண்டாலும் பூனை சவுண்டு ‘மியாவ்’தான்!
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.