தன்னைப் பற்றி வந்த கிசுகிசுவுக்கு விளக்கம் அளித்திருக்கிறார் லட்சுமிராய். தோனியுடன் காதல் என்று எழுதிய போதும் கலங்காதவர், இப்போது விளக்கம் தர அவரது நல்ல உள்ளம்தான் காரணம்.
லட்சுமிராய் விரைவில் இந்திப் படத்தில் நடிக்கிறார். இதற்காக கடும் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்து வருகிறார். அவருக்கு ட்ரெய்னராக இருப்பவர், பிரசாத் என்பவர்.
படப்பிடிப்புக்காக வெளியூர் போகும் போது பிரசாத்தின் பயிற்சியை தவறவிடக் கூடாது என்பதற்காக அவரையும் தன்னுடன் அழைத்து சென்று வந்தார் லட்சுமிராய். இதற்கு காது, மூக்கு வைத்து சிலர் எழுதிவிட்டார்கள்.
தோனியுடன் காதல் என்று எழுதியதும், ஆர்யாவுடன் தனிக்குடித்தனம் என்று எழுதியதும் சம்பந்தப்பட்டவர்களை துளியும் பாதிக்காது. ஆனால் பிரசாத் விஷயம் அப்படியல்ல. அவருக்கு இப்போதுதான் பெண் பார்த்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த வதந்தி அவரையும், அவரது குடும்பத்தையும் கடுமையாக பாதிக்கும். அதற்காகவே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று விளக்கம் அளித்துள்ளேன் என்றார் லட்சுமிராய்.
உண்மையிலேயே லட்சுமிராய்க்கு பெரிய மனசுதான்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.