மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நிலுவைத் தொகைகளை கொடுக்காமல் இழுத்தடிக்கும் I.C.L டிம் மே சாடல்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எதிராக துவங்கப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீக் என்ற ஐ.சி.எல். கிரிக்கெட் அமைப்பு அதன் கீழ் விளையாடிய பல வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சேர வேண்டிய நிலுவைத் தொகைகளை கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது என்று சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் டிம் மே குற்றஞ்சாற்றியுள்ளார்.

ஆனால் இது பற்றி கவலைப்படாமல் ஐ.சி.எல்.-ஐ நடத்தி வந்த எஸ்ஸெல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தங்களுக்கு தடை விதித்ததால் ஏற்பட்ட நஷ்டங்களுக்கு இழப்பீடு கோரும் தாக்கீது ஒன்றை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், ஐ.சி.சி.யிற்கும் அனுப்பியுள்ளது!

பல வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மிகப்பெரிய அளவில், கோடிக்கணக்கான டாலர்களை நிலுவையில் வைத்திருக்கும் ஐ.சி.எல். அமைப்பு என்ன தார்மீக அடிப்படையில் இந்த தாக்கீதை அனுப்புகிறது? என்று டிம் மே கேள்வி எழுப்பியுள்ளார்.

"கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்ட வீரர்களுக்காக சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்க கூட்டமைப்பு ஐ.சி.எல். அமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது, வீரர்களும் ஐ.சி.எல்-இடம் தொடர்ந்து நிலுவைத் தொகை குறித்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த தொகை பல மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.சி.எல் அமைப்பும் குறிப்பிட்ட தேதிகளில் நிலுவையை கொடுத்து விடுவதாகக் கூறியது. ஆனால் நாட்கள்தான் நகர்ந்து வருகின்றன. தொகை கைக்கு வரும் வழியாகத் தெரியவில்லை.

இதனால் வீரர்களும் பிற உதவிப் பணியாளர்களும் அதிகாரிகளும் சோர்வடைந்துள்ளனர். அவர்களிடமிருந்து பணத்தை பெறுவதற்கான அனைத்து சுமுக வழிகளையும் கையாண்டு சோர்வடைந்திருப்பதால் இப்போது ஐ.சி.எல். அமைப்பு மீது வழக்கு தொடரவேண்டும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்". இவ்வாறு டிம் மே கூறியுள்ளார்.

ஆனால் ஐ.சி.எல் கிரிக்கெட்டை நடத்திய எச்சேல் குழுமமோ, தடை உத்தரவு பிறப்பித்ததால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு கோருகிறது.

இந்த வழக்கில் ஐ.சி.எல். வெற்றி பெற்றாலும் வழக்கிற்குக் முன்பே ஒப்பந்தம் செய்த தொகைகளை அவர்கள் கொடுத்துத்தான் ஆகவேண்டும். இந்த வழக்கின் முடிவு வீரர்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகை விவகாரத்தை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்று கூறுகிறார் டிம் மே.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.