மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சிம்பு பட ஆடியோ விழா லண்டனில்

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் நடக்கவிருக்கிறது. லண்டனில் இந்த விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கௌதம் இயக்கத்தில் முதல் முறையாக சிம்பு, த்‌ரிஷா நடித்திருக்கும் படம் விண்ணைத்தாண்டி வருவாயா. காதல் கதையான இதில் உதவி இயக்குனராக சிம்பு நடித்திருக்கிறாராம். படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் அமெ‌ரிக்காவின் நியூயார்க் நக‌ரில் படமாக்கப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்த திட்டமிட்டுள்ளனர். ரஹ்மான் தற்போது லண்டனில் இருப்பதால் இந்த முடிவாம். வரும் 18ஆம் தேதி விழா நடைபெறும் என கூறப்படுகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.