மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வேட்டைக்காரன், அசல் இணையதளத்தில்

இணையதளத்தில் அசல் படத்தின் சில காட்சிகளும், வேட்டைக்காரனின் வெளியிடப்படாத பாடல் ட்ரெய்லரும் வலம் வருகிறது. இவை இரண்டுமே சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் 'சுட்டு' வெளியிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவமே காவலுக்கு நின்றாலும் படப்பிடிப்பை படம் எடுப்பவர்களும், வீடியோவில் ரகசியமாக சுருட்டுகிறவர்களும் இருக்க‌தான் செய்வார்கள். பலத்த பாதுகாப்புடன் நடந்த எந்திரன் படத்தின் புகைப்படங்களும், வீடியோவும் இணையதளங்களில் வெளியானதே இதற்கு சாட்சி.

இப்போது வேட்டைக்காரன் படத்தின் வெளிவராத ட்ரெய்லர், பிரான்சில் அசல் படப்பிடிப்பு நடந்தபோது ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் நெட்டில் வலம் வருகிறது. சைபர் கிரைம் விழித்துக் கொண்டால் மட்டுமே இதுபோன்ற அத்துமீறல்களை தடுக்க முடியும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.