
தெலுங்கில் ஆயிரத்தில் ஒருவனை யுகனிக்கி ஒக்கடு என்ற பெயரில் வெளியிட்டார்கள். ஒரே வாரத்தில் ஆந்திரா முழுவதும் 1.78 கோடிகளை படம் வசூலித்தது. இந்த வரவேற்பை எதிர்பார்க்காதவர்கள் ஆந்திராவுக்கே சென்று படத்தை புரமோட் செய்திருக்கிறார்கள். தமிழில் விமர்சனத்தை மட்டுமே எதிர்கொண்டவர்களை இந்த மெகா கலெக்சன் ஆற்றுப்படுத்தியிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து கார்த்தியின் பருத்தி வீரனையும் தெலுங்கில் டப் பண்ணும் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. படத்தின் பெயரையும் தேர்வு செய்திருக்கிறார்கள். பல்நட்டி வீருடு.
இந்தப் படத்துக்கு சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதற்காகத்தான் தெலுங்கு கற்று வருகிறார் கார்த்தி. இதற்குப் பெயர்தான் ஈடுபாடு.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.