Wednesday, February 17, 2010

> மீனவனாக கார்த்தி

பையா படத்தின் ‌ரிலீஸுக்காக காத்திருக்கிறார் கார்த்தி. முதலிரண்டு படங்களிலும் அழுக்குமூட்டையாக நடித்தவர் பையாவில்தான் தனது ஒ‌ரி‌ஜினல் அழகுடன் திரையில் தோன்றுகிறார்.

தற்போது சுரேந்திரன் இயக்கும் நான் மகான் அல்ல படத்தில் நடித்து வருகிறவர் அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வட சென்னை படத்தில் நடிக்கிறார். பொல்லாதவனுக்குப் பிறகு சென்னையை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கும் படம் இது.

வட சென்னையில் மீனவ இளைஞனாக கார்த்திக்கு முற்றிலும் வித்தியாசமான வேடம். மீனவர்களின் நல்வாழ்வுக்காக போராடும் முற்போக்கு கதாபாத்திரம் என்று பீதியடைய வேண்டாம். கேரக்டர் மீனவர் என்றாலும் இதுவும் மாஃபியா சம்பந்தப்பட்ட கதைதான்.

சுறா படத்தில் விஜய்யும் மீனவனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.