
உலகம் முழுவதும் தீவிரவாதம் பரவியிருக்கும் நிலையில் முஸ்லீம்கள் மட்டும் அதி தீவிரமாக அனைத்து நாடுகளாலும் கண்காணிக்கப்படுகிறார்கள்.
அமெரிக்க விமான நிலையத்தில் ஷாருக்கான் தனது முஸ்லீம் பெயருக்காக பல மணிநேரம் விசாரணை செய்யப்பட்டார். அதேபோல் ஹாசன் என்ற பெயருக்காக கமல்ஹாசனும் பல மணி நேரம் விசாரணையை சந்திக்க வேண்டி வந்தது.
ஜீவா விஷயத்திலும் இதுதான் நடந்துள்ளது. ஜீவாவின் நிஜப் பெயர் அமீர். இந்தப் பெயரில்தான் அவரது பாஸ்போர்ட் உள்ளது. முஸ்லீம் பெயராக இருப்பதால்தான் அவருக்கு சீன தூதரகம் விசா மறுத்துள்ளது.
தீவிரவாதிகள் எல்லோரும் முஸ்லீம்கள் என்று சித்தரிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் உள்ளது. இதில் டாக்டரேட் வாங்கியவர் விஜயகாந்த். சமீபத்தில் வெளியான தமிழ்ப் படத்திலும் கூட தீவிரவாதி என்று தாடி வைத்த முஸ்லீம் பாரம்பரிய உடை அணிந்தவரையே காட்டுகின்றனர்.
தமிழ் சினிமா விதைத்த வினைகளில் ஒன்றைதான் அறுவடை செய்திருக்கிறார் ஜீவா.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.