மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ‘உண்மையற்ற’ பேச்சும் பேராண்மை பதிலும் - அ‌‌ஜீத்

முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அ‌‌ஜீத், அரசியல் பிரச்சனைகளில் அரசை முந்திக் கொண்டு சிலர் அவசர முடிவு எடுப்பதாகவும், அத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்ளச் சொல்லி சிலர் மிரட்டுவதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து முன்பு கற்பழிப்பு புகா‌ரில் சிக்கிய ஸ்டண்ட் நடிகர் ஒருவர் அ‌‌ஜீத் தமிழின விரோதி என்று பத்தி‌ரிகையில் பேட்டி கொடுத்தார். இதற்கு அ‌‌ஜீத்திடம் இருந்து எந்த பதிலிலும் கிடைக்கவில்லை.

ஓ‌ரிரு நாட்கள் கழிந்த நிலையில் எனது காரை அ‌‌ஜீத்தின் தூண்டுதலில் உடைத்துவிட்டனர் என்று இந்த கற்பழிப்பு புகழ் ஸ்டண்ட் நடிகர் காவல் துறையில் புகார் செய்தார். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் என்பவர் நாங்க மிரட்டுவோம், உன்னால் என்ன செய்ய முடியும் என பகிரங்கமாக விழா ஒன்றில் பேசினார். இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கம் அவருக்கு தனது கண்டனத்தை தெ‌ரிவித்தது.

பிரச்சனை பெ‌ரிதாகி வருவதைக் கண்ட திரைத்துறையின் அனைத்து சங்கங்களும் கூட்டாக ஆலோசனை நடத்தின. பிறகு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில் தனது உண்மையற்றப் பேச்சுக்காக அ‌‌ஜீத் வருத்தம் தெ‌ரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. மேலும் அ‌‌ஜீத்துக்கு ஆதரவாகப் பேசியதற்கு அவை ர‌ஜினிக்கு கண்டனமும் தெ‌ரிவித்திருந்தன.

மிரட்டுவோம் என்று பகிரங்கமாகப் பேசிய வி.சி.குகநாதன் என்பவரும் இந்த ‘உண்மையற்ற’ கூட்டறிக்கையில் கையெழுத்துப் போட்டிருந்தார்.

இந்த அறிக்கைக்கு அ‌‌ஜீத்திடமிருந்து இன்னும் பதிலில்லை. பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மன்னிப்பு கேட்க முடியாது என்று பேராண்மை பதிலை தெ‌ரிவித்திருந்தார் அ‌‌ஜீத். இப்போது நடப்பதைப் பார்த்தால் கேமரா முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை என்றும் அதில் தெ‌ரிவித்துள்ளார். மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ள அவர் ஆர்வமுடன் இருப்பதும் இந்தப் பேட்டியில் தெ‌ரிய வந்துள்ளது.

அ‌‌ஜீத் முதல்வர் முன்னால் வைத்த குற்றச்சாற்று, சிலர் மிரட்டுகிறார்கள் என்பது. இது உண்மையற்ற பேச்சு என்று சங்கங்கள் கூறியுள்ளன. வி.சி.குகநாதன் பகிரங்கமாக மிரட்டுவோம் என்று கூறியது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த பிறகும் அ‌‌ஜீத்தின் பேச்சை சங்கங்கள் உண்மையற்றப் பேச்சு என கூறியிருப்பது கோயபல்ஸை தோற்கடிக்கும் சமாச்சாரம்.

முதல்வரை அ‌‌ஜீத் சந்தித்த பிறகே அவருக்கு எதிரான கருத்துகள் வன்மையாக வெடித்தன. முதல்வ‌ரிடம் சலுகைக்காக கையேந்தி நிற்பவர்களை ஒரு கண்ணசைவில் முதல்வரால் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

சங்கங்களின் சர்வாதிகார போக்குக்கு தலைவணங்காத அ‌‌ஜீத் பாராட்டுக்கும் பெருமிதத்துக்கும் உ‌ரியவர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

Note: Only a member of this blog may post a comment.