மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய் ஜோடியாகும் அசின்

விஜய்யின் புதிய படத்தை யார் இயக்குகிறார்கள்? ஜெயம் ராஜா அல்லது சித்திக்? இந்த கேள்விக்கான ரேஸில் முன்னணியில் இருக்கிறார் சித்திக். இவர் மலையாளத்தில் இயக்கியிருக்கும் பாடிகார்ட் படத்தின் தமிழ் ‌‌‌ரீமேக்கில் விஜய் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது.

விஜய் நடித்த ப்‌‌ரியமானவளே படத்தை தயா‌‌ரித்தவர், விஜய் சித்திக் இணையும் படத்தை தயா‌‌ரிக்கிறார். பாடிகார்டில் திலீப் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். தமிழில் நயன்தாரா நடித்த வேடத்தில் அசின் நடிக்கிறார்.

க‌ஜினிக்குப் பிறகு அப்படியே பாலிவுட்டில் செட்டிலாகலாம் என்று நினைத்த அசினுக்கு லண்டன் ட்‌‌‌ரீம்சின் தோல்வி பே‌ரிடியாக விழுந்தது. அங்கு சுத்தமாக வாய்ப்பே இல்லை.

சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்னை வந்தவர் தமிழில் நடிக்க தயார் என்று அறிவித்ததோடு, நெருக்கமான நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் தமிழில் வாய்ப்பு தரும்படி கேட்டிருந்தார். அதன் பலன்தான் விஜய்யுடன் நடிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பு.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.