
க்ரைம் சப்ஜெக்டிலும் சில்லென்று ஒரு காதலை வைப்பதில் கௌதம் கெட்டிக்காரர். உறுத்தாமல் இயல்பாக படத்தோடு பொருந்திப் போவதாக இருக்கும் இந்தக் காதல்.
அஜித்தின் 50வது படத்தில் அவரது காதலியாக நடிக்கப் போகிறவர் யார்?
சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித்தின் 49வது படத்தை கௌதம் இயக்குவதாக இருந்தது. அஜித் ஜோடி சமீரா ரெட்டி என்பது வரை முடிவு செய்து வைத்திருந்தனர். கௌதம் ஸ்கிரிப்டை உருவாக்க நேரம் எடுத்துக் கொண்டதால் அந்த வாய்ப்பு சரணுக்கு சென்றது.
இந்நிலையில் அஜித்தின் 50வது படத்திலும் சமீராவே நடிக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. கௌதம் படத்தில் நடிக்கயிருப்பதாக சமீரா கூறியிருப்பதைத் தொடர்ந்து அஜித்தின் 50வது படத்தின் ஹீரோயின் சமீரா என்று ஊடகங்கள் எழுதுகின்றன. இது உண்மையா?
இல்லை. கௌதம் புதுமுகம் ஒருவரை வைத்து த்ரில்லர் படம் ஒன்றை இயக்குகிறார். இதில்தான் சமீரா நடிக்கிறார். அஜித்தின் 50வது படத்தின் ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை என்பதே உண்மை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.