
நீதானே என் பொன் வசந்தம், முகமூடி என இருபடங்கள் ஜீவா கைவசம் உள்ளது. இரண்டும் பெரிய படங்கள். இதையடுத்து ஜனநாதனின் சரித்திரப் படங்களில் நடிக்கிறார். அந்தவகையில் அடுத்த வருடம் வரை அவரது கால்ஷீட் டைரி ஃபுல்.
ஆனால் ஆசை யாரை விட்டது. கோ தெலுங்கில் ரங்கம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு உலக ஓட்டம் ஓடியது. படத்தை ஜீவாவின் தந்தை ஆர்.பி.சௌத்ரி வெளியிட்டிருந்தார். இதன் காரணமாக நேரடித் தெலுங்குப் படத்தில் நடிக்க ஜீவா ஆர்வம் காட்டுகிறார்.
பெரிய படங்களுக்கு நடுவில் இந்த தெலுங்கு ஆசையை பூர்த்தி செய்ய சரியான இயக்குனரை தேடி வருகிறார்கள் அப்பாவும், மகனும்
உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
ReplyDeletePress Meet Gallery