மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வசந்தபாலனின் அரவானுக்கு அடுத்த திட்டம்

அரவான் படத்தை இயக்கிவரும் வசந்தபாலன் அடுத்து இயக்கும் படம் குறித்த தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. அரவான் போலவே பிரமாண்டமாக தயாராகவிருக்கும் இந்தப் படத்தில் பரத், அஞ்சலி நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த இருவரும் தற்போது அரவானில் நடித்து வருகின்றனர். இருவருக்கும் முக்கியமான வேடம். ஆனால் முதன்மையான வேடங்கள் கிடையாது. அடுத்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடிப்பதால் அரவானில் சிறிய கேரக்டர்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

விரைவில் ஆங்கிலப் படமொன்றையும் வசந்தபாலன் இயக்கவிருக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.