தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதை மாற்ற வேண்டும் போலிருக்கிறது. அண்ணன் உடையான் பகைக்கு அஞ்சான்.
ஸ்டுடியோ கிரீன் வெளியிடுவதாக இருந்த மங்காத்தா இப்போது சன் பிக்சர்ஸ் சார்பில் வெளியாகிறது. இதற்கு காரணமாக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். குழப்பமாக இருக்கிறதில்லையா? விளக்கமாகவே சொல்கிறோம்.
தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் மங்காத்தாவை தயாரித்தது. ஆட்சி மாறியதால் பல்வேறு பிரச்சனைகள். படத்தை தயாநிதி அழகிரி கை மாற்றிவிட நினைத்தார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் படத்தின் உரிமையை வாங்கிக் கொண்டார். அதன் பிறகு காட்சிகள் மாறின.
படத்தின் விளம்பரத்தில் தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் பெயரை முற்றிலுமாக தவிர்த்தார் ஞானவேல். காரணம் கேட்டதற்கு, ஜெயா டிவிக்கு படத்தின் தொலைக்காட்சி உரிமையை விற்க இருப்பதாகவும், அதனால் பெயரை போட முடியாது என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த செய்தி உதயநிதி ஸ்டாலினின் காதுக்குப் போனது. அவர் அப்போதுதான் தனது 7 ஆம் அறிவு படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சிக்கு விற்றிருந்தார். அவரின் ஆலோசனைப்படி படத்தின் உரிமை ஞானவேலிடமிருந்து சன் பிக்சர்ஸுக்கு கைமாறியது. இப்போது சன் பிக்சர்ஸுடன் கிளவுட் நைன் பெயரும் விளம்பரங்களில் இடம் பெறுகிறது.
அண்ணன் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜே போட்டுக் கொண்டிருக்கிறார் தம்பி தயாநிதி அழகிரி.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteபடம் நல்லா இருந்தா சரி......
ReplyDelete