இது சரித்திர காலம். வசந்தபாலன் அரவான் என்ற சரித்திரப் படத்தை எடுக்கிறார். விக்ரம் நடிக்கும் கரிகாலனும் சரித்திரப் படம்தான். ராணா கதை அனைவரும் அறிந்த சரித்திரம். 7ஆம் அறிவிலும் சரித்திரம் வருகிறது. எஸ்.பி.ஜனநாதன் அடுத்து ஜீவா, ஜெயம் ரவியை வைத்து எடுப்பதும் சரித்திரக் கதைதான்.
தனுஷ் மட்டும் விதிவிலக்கா என்ன. அவரும் சரித்திரப் படம் நடிக்கிறார். பெயர் மாரிசன்.
ராமாயணத்தில் மாரிசன் மாய மானாக வந்து லக்ஷ்மணனை ஏமாற்றிய கதை தெரிந்திருக்கும். அது புராண மாரிசன், இது சரித்திர மாரிசன். 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த கதையாம் இது. சிம்புதேவன் இயக்குகிறார். யு டிவியை வாங்கியிருக்கும் வால்ட் டிஸ்னி படத்தை தயாரிக்கிறது.
kalaku ilaya super star
ReplyDelete