தமிழ் திரையுலகமே ஒரு படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்க்கிறது. அந்தப் படம் எது என்று சொல்லத் தேவையில்லை.எந்திரன் எப்போது வரும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒருவகை என்றால் நடிகர்களின் எதிர்பார்ப்பு வேறுவகை. எந்திரன் திரைக்கு வரும்போது நமது படம் கண்டிப்பாக வெளியாகக் கூடாது என்ற விழிப்புடன் எந்திரனுக்காக காத்திருக்கிறார்கள் இவர்கள். சேர்ந்து வந்தால் படம் கலெக்சனில் துவையலாகிவிடும் என்ற நடைமுறை உண்மை இவர்களுக்கு அதிகடியாகவே தொpயும்.
விஜய்யை கலெக்சனில் பீட் பண்ணும் சூர்யாவே எந்திரன் வெளியாவதற்காக காத்திருக்கிறார் என்றால் மற்றவர்கள் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
சூர்யாவின் ரத்த சரித்திரம் விரைவில் வெளியாகிறது. இம்மாதமே வெளியிடலாம் என்று சொன்ன ராம் கோபால் வர்மாவை, வம்பு எதற்கு என்று தடுத்திருக்கிறார் சூர்யா.
எந்திரன் வெளியாகி அதன் ஹீட் தணிந்த பிறகு ரத்த சரித்திரத்தை வெளியிடலாம் என கூறியுள்ளாராம். இந்த அறிவுரையின் நியாயம் புரிந்து வர்மாவும் படத்தை தாமதமாக வெளியிட முடிவு செய்துள்ளார்.





0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.