மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> I.P.L பெ‌ங்களூரை ‌வீ‌ழ்‌த்‌தி இறுதிப்போட்டிக்கு செ‌ன்றது மும்பை

ஐ.பி.எல். கிரிக்கெட் அரைஇறுதியில் பெங்களூர் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகு‌தி பெ‌ற்றது.

3வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் நே‌‌ற்‌றிரவு மும்பையில் நடந்த முதலாவது அரைஇறுதியில், லீக் சுற்றில் முதலிடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணியும், 4-வது இடம் பிடித்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

பூவா தலையா வெ‌ன்ற மும்பை அ‌ணி‌த் தலைவ‌ர் டெண்டுல்கர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி அவரும், ஷிகர் தவானும் மும்பையின் இன்னிங்சை தொடங்கின‌ர். ஸ்டெயின் வீசிய இரண்டாவது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய டெண்டுல்கர் அதே ஓவரில் வீழ்ந்தார். இவ‌ர் 9 ப‌ந்‌தி‌ல் 9 ரன்க‌ள் எடு‌த்தா‌ர்.

இந்த ஐ.பி.எல். தொடரில் டெண்டுல்கர் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழப்பது இதுவே முதல் முறையாகும். சிறிது நேரத்தில் தவான் (12 ரன்) தேவையில்லாமல் ரன்-அவுட் ஆனார். இதன் பின்னர் அபிஷேக் நாயரும், அம்பத்தி ராயுடுவும் அணியை கொஞ்சம் நிமிர்த்தினர். நாயர் 22 ரன்களில் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். அடுத்து வந்த டுமினியும் (3) ஏமாற்றினார். முதல் 10 ஓவர்களில் மும்பை 4 விக்கெட்டுக்கு 81 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

இதை தொடர்ந்து 5-வது விக்கெட்டுக்கு ராயுடுவுடன், சவுரப் திவாரி ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியின் ஸ்கோரை படிப்படியாக நல்ல நிலைக்கு உயர்த்தினார். திவாரியின் ஆட்டம் மிரட்டலாக இருந்தது. கடைசி 5 ஓவர்களில் மும்பையின் தாக்குதலில் பெங்களூர் பவுலர்கள் நிலை குலைந்து போயினர். அணியின் ஸ்கோர் 144 ரன்களாக உயர்ந்த போது, ராயுடு 38 ப‌ந்துக‌ளி‌‌ல் 40 ரன்க‌ள் எடு‌த்‌திரு‌ந்தபோது ஆட்டம் இழந்தார்.

இதன் பின்னர் 14 பந்துகள் மட்டுமே எஞ்சிய இருந்த நிலையில் களம் இறங்கிய ஆல்-ரவுண்டர் பொல்லார்ட் பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்டு ஸ்கோரை மேலும் எகிறச் செய்தார். கடைசி 5 ஓவர்களில் முறையே 17, 17, 10, 17, 16 என்று மும்பை அணி 77 ரன்கள் சேகரித்ததால், சவாலான ஸ்கோரை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.

31 ப‌ந்துக‌ளி‌ல் 3 பவு‌ண்ட‌ரி, 4 ‌சி‌க்ச‌ருட‌ன் 52 ‌ர‌ன்க‌ள் கு‌வி‌த்த திவாரியு‌‌‌ம், 13 ப‌ந்துக‌ளி‌ல் ஒரு பவு‌ண்ட‌ரி, 3 ‌சி‌க்சருட‌ன் 33 ரன்க‌ள் கு‌வி‌த்த பொல்லார்டு‌ம் கடை‌சிவரை களத்தில் இருந்தனர்.

பெங்களூர் அணியின் பீல்டிங் குறிப்பிடும்படி இல்லாததும், மும்பை அணியின் ரன் உயர்வுக்கு ஒரு காரணமாகும். இதே போல் முதல் 3 ஓவரில் கட்டுக்கோப்புடன் பந்து வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்த பெங்களூர் அ‌ணி‌த் தலைவ‌ர் கும்ளே தனது கடைசி ஓவரில் 16 ரன்களை வாரி வழங்கினார்.

பின்னர் விளையாடிய பெங்களூர் அணி வெற்றியை நோக்கி சென்றாலும் உத்தப்பா அவுட்டான பிறகு அந்த நம்பிக்கை தளர்ந்தது.

ராஸ் டெய்லர் அதிகபட்சமாக அவுட்டாகாமல் 31 ரன்கள் எடுத்தார். காலிஸ் (11), திராவிட் (23), பீட்டர்சன் (19), உத்தப்பா (26) அவுட்டானபிறகு அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கிலேயே பெவிலியன் திரும்பினர்.

மும்பை வீரர் பொல்லார்டு 17 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மலிங்கா, ஹர்பஜன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இன்று நடக்கும் சென்னை-டெக்கான் இடையிலான அரைஇறுதியில் வெற்றி பெறும் அணியை இறுதிப்போட்டியில் மும்பை அணி வருகிற 25ஆ‌ம் தேதி சந்திக்கும். தோல்வியடைந்த பெங்களூர் அணி 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் விளையாடும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.