
கோவா படப்பிடிப்பின் போது பியாவின் அழகு, கேரக்டரில் மயங்கிவிட்டாராம் பிரேம்ஜி. உடனே அவரிடம் காதலை தெரிவித்திருக்கிறார். பியாவுக்கும் பிரேம்ஜியை பிடிக்க அவரும் ஒத்துக் கொண்டுள்ளார்.
தனது காதலை வீட்டில் தெரிவித்துவிட்டாராம் பிரேம்ஜி. பியாவைதான் திருமணம் செய்வது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம்.
பொதுவாக சினிமாவில் உள்ளவர்கள் காதலித்தால் காதலிப்பவர்கள் அதனை வெளிப்படுத்த மாட்டார்கள். பத்திரிகைகள்தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்து இஷ்டப்பட்டு அம்பலப்படுத்தும். பிரேம்ஜி விஷயத்தில் அவரே காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்படியானால்...?
வெங்கட்பிரபுவும், சி.எஸ்.அமுதனும் சேர்ந்து ஜனங்களை முட்டாளாக்கியது போல், பிரேம்ஜியும் ரசிகர்களை முட்டாளாக்க தேர்ந்தெடுத்ததுதான் இந்த காதல் கதையாம். அதாவது இது டூபாக்கூர் காதலாம்.
திரையில்தான் நோகடிக்கிறார்கள் என்றால், இப்படி நிஜத்திலுமா நோகடிப்பது?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.