மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வாடா - மு‌ன்னோ‌ட்ட‌ம்

ஸ்கி‌‌ரீன் ‌ப்ளே எ‌‌ண்டர்டெயின்மெண்ட் சார்பில் எம்.ஆர்.மோகன்ராதா தயா‌ரித்திருக்கும் படம், வாடா. ஏ.வெங்கடேஷ் படத்தை இயக்கியிருக்கிறார். ஹீரோ சுந்தர் சி.
வழக்கமான சுந்தர் சி-யின் படங்களில் இடம்பெறும் காதல், மோதல், ‌‌ரீமிக்ஸ் பாட்டு என அனைத்து கொத்துக்கறியும் வாடாவிலும் உண்டு. சிவா என்ற கதாபாத்திரத்தில் சுந்தர் சி. யும், ஜெயா என்ற கதாபாத்திரத்தில் ஷெ‌ரில் பி‌ரிண்‌ட்டோவும் நடித்துள்ளனர். ஷெ‌ரில் பி‌ரிண்‌ட்டோ படத்தின் நாயகி. இவர் படத்தில் எம்.‌ஜி.ஆர். ரசிகராக வருகிறார்.

கோபி என்ற கதாபாத்திரத்தில் விவேக் நடித்துள்ளார். கெட்டப் போடாமல் நடிக்க முடியாது என்ற வறட்சி நிலைக்கு தள்ளப்பட்ட இவர் இந்தப் படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜனைப் போல் கெட்டப் போட்டு காமெடி செய்ய முயன்றிருக்கிறார்.

இவர்களுடன் கிரண், ரா‌ஜ்கபூர், ஓ.ஏ.கே.சுந்தர், ராஜலட்சுமி, பிரேம், பிரபல இந்தி நடிகர் அமித் தவான் ஆகியோரும் நடித்துள்ளனர். டி.இமான் படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரபல, என்னடி ராக்கம்மா பாடலை ‌‌ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள். இந்தப் பாடலில் சுந்தர் சி-யுடன் இணைந்து குஷ்பு ஆடியிருக்கிறார். சுந்தர் சி. நடிக்கத் தொடங்கிய பிறகு அவருடன் குஷ்பு இணைந்து நடிக்கும் முதல் பாடல் காட்சி இது என்பது முக்கியமானது.

பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு கே.எஸ்.செல்வரா‌ஜ். வரும் வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வருகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.