மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரஜினிகாந்த் புகார் - மல்லிகா ஷெராவத்துக்கு பிடிவாரண்டு

இந்திப் படவுலகின் கவர்ச்சிப்புயல் நடிகை மல்லிகா ஷெராவத். இவர் பங்கேற்ற ஒரு நடன நிகழ்ச்சியில் அரைகுறை ஆடை அணிந்து மிகவும் ஆபாசமாக நடனமாடியதாக தகவல்கள் வெளியாகின.

இவரது ஆபாச செய்கைகள் அருவெறுப்பை ஏற்படுத்துவதாகக்கூறி, ரஜினிகாந்த் என்பவர் மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள பந்தர்கவ்டா முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.

மேலும் மல்லிகாவின் ஆபாச அங்க அசைவுகளைக்கொண்ட நடனக் காட்சிகள் அடங்கிய வீடியோ சி.டி., போட்டோக்களையும் அவர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். அவற்றை கோர்ட் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதையடுத்து மல்லிகா ஷெராவத்துக்கு, மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தின் மூலமாக சம்மன் அனுப்பியது.

ஆனால் அவரது வக்கீல், தன் கட்சிக்காரர் கோர்ட்டில் ஆஜர் ஆவதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று முறையிட்டார். இருமுறை அப்படி அவகாசம் வழங்கிய கோர்ட்டு, நேற்று அவர் கண்டிப்பாக வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அப்படி இருந்தும் அவர் நேற்றைய விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகவில்லை. வழக்கை தொடுத்துள்ள ரஜினிகாந்த், நேற்று இது குறித்து கோர்ட்டில் சுட்டிக்காட்டியதுடன், நடிகைக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக ஜாமீனில் விடத்தக்க பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு சுனில் பொரால்கர் உத்தரவிட்டார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.