மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மன்மதன் அம்பு - கமலின் காதல் கலாட்டா

காதல் இளவரசன் என்ற தனது பழைய பட்டத்தை இப்போது சொன்னால் கமலுக்கு கோபம் வந்துவிடும். காதல் இளவரசன் என்ற வட்டத்தை தாண்டிவிட்டதாக அவர் கருதுவதே இதற்கு காரணம். ஆனால் அந்தப் பட்டம் மேலும் தீவிரமாக கமலை ஒட்டிக் கொள்ளுமோ என்று எண்ண வைக்கிறது அவரது புதிய படம்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயா‌ரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் கமல் நடிக்கிறார். த்‌ரிஷா ஹீரோயின். மாதவன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு முதலில் யாவரும் கேளிர் என்று பெயர் வைத்தனர். பிறகு பெயர் மாறப்போவதாக அறிவித்தனர். படத்தின் பெயர் காருண்யம் என்று மாறப்போவதாக செய்தி கிளம்பிய நிலையில் படத்துக்கு மன்மதன் அம்பு என்ற பெயரை படக்குழு தேர்வு செய்துள்ளது.

முழுநீள நகைச்சுவைப் படமான இது முக்கோண காதல் கதை என்றும் அதனாலேயே மண்மத அம்பு என்ற பெயரை தேர்வு செய்திருப்பதாகவும் படவட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.