ரஜினி படம் பற்றிய தகவல் நாளுக்கு ஒன்றாக வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தும். மங்காத்தா அதை மிஞ்சிவிட்டது. நாளைக்கு இரண்டு செய்திகள். உபயம் ட்விட்டர்.
மங்காத்தா எப்போது வெளியாகும் என்பது முடிவாகவில்லை. ஆனால் அதன் முடிவு எப்படி இருக்கும் என்று இரண்டு தகவல்கள். ஒன்று, ஜார்ஜ் குளூனியின் நரைத்த முடி கெட்டப்பில் படம் முழுக்க வரும் அஜீத், படத்தின் இறுதியில் ஸ்மார்ட் கெட்டப்பில் நரைமுடியில்லாமல் தோன்றுகிறார்.
இரண்டாவது இன்னும் புதிது. ஜாக்கிசான் படங்களில் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸியமான விஷயங்களை தொகுத்து அளிப்பார்களே... அதேமாதிரி மங்காத்தா படப்பிடிப்பில் நடந்தவற்றை தொகுத்து அளிக்கிறாராம் வெங்கட்பிரபு.
ஃபுல் மீல்ஸுக்கு அப்புறம் பீடா... ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
thala thala thaan......
ReplyDeletethlai yai pathi eluthinathuku....vungalukku oru royal salult
ReplyDeletethala pola varuma
ReplyDelete