
முதல் பாகத்தை ரசிகர்கள் கை கழுவினாலும் இரண்டாம் பாகத்தைப் பார்க்க ஆவலாக உள்ளனர். காரணம் முதல் பாகத்தின் இறுதியில் காட்டப்பட்ட இரண்டாம் பாகத்துக்கான ட்ரெய்லர். இந்த ட்ரெய்லரில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தவர் சிக்ஸ்பேக் சூர்யா.
ஆம், இரண்டாம் பாகத்தில் சூர்யா பிரதானமாக வருகிறார். சூர்யாவின் ஆக்ரோஷமான நடிப்பைப் பார்த்த பாலிவுட் முன்னணி நடிகர்களே படம் பார்க்கும் ஆசையில் இருக்கிறார்கள் என்றால் ரசிகர்களைப் பற்றி என்ன கூறுவது?
இந்திப் படத்துக்கு சூர்யாவே டப்பிங் பேசினார் என்றும் சூர்யாவின் இந்தி மாஸ்டர் அவரது மனைவி ஜோதிகா என்றும் முன்பே குறிப்பிட்டிருந்தோம். அதனை சமீபத்தில் நடந்த விழாவொன்றில் சூர்யாவும் உறுதி செய்திருக்கிறார்.
vilangum
ReplyDelete