சென்டிமெண்டில் அதிக நம்பிக்கை உள்ளவர் ரஜினி. ஒருமுறை வேண்டாம் என்று மனதில் தோன்றிவிட்டால் பிறகு அதை அவர் தொடுவதில்லை.
ஜக்குபாய் கதை விவாதம் முடிந்து, விளம்பரமும் கொடுத்த பிறகு, ஜக்குபாய் நமக்கு சரிவராது என்று ரஜினி முடிவெடுத்தார். அந்த முடிவு இறுதி வரை மாறவில்லை. அவர் மனசுக்குள் மணி அடித்தால் மட்டுமே எந்த விஷயத்தையும் செயல்படுத்துவார்.
ராணா படத்தின் முதல்நாள் ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுக்கும் அளவுக்கு நிலைமை சென்றதால் படத்தின் பெயரை மாற்றலாமா என ரஜினியை சார்ந்தவர்கள் யோசித்து வருகின்றனர். மேலும் பெயர் மாறும் போது படத்துக்கு ஒரு புதிய முகமும் கிடைக்கும்.
விரைவில் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.