எந்திரன் படத்தின் பட்ஜெட் ஏறக்குறைய நூறு கோடியை தொடும் என்று படம் ஆரம்பிக்கும் முன் கூறப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய பிறகு இது நூற்றியிருபது கோடியாக உயர்ந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஒரே நாளில் பட்ஜெட் நூற்றைம்பது கோடியாக எகிறியது.
இம்மாதம் எந்திரனின் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில் படத்தின் பட்ஜெட் குறித்து காற்றுவாக்கில் ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அது, படத்தின் பட்ஜெட் 190 கோடியை தாண்டிவிட்டது என்பதே. இந்த புதிய நம்பரைப் பார்த்து பலர் வாய் பிளந்தாலும், நமட்டுச் சிரிப்புடன் கடந்து செல்கிறர்கள் கோடம்பாக்க அனுபவசாலிகள்.
எந்திரன் படத்தைக் குறித்து வரும் இன்னொரு தகவல் ஜப்பான் மட்டுமின்றி சீனாவிலும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் படத்தின் பிரிண்டுகளின் எண்ணிக்கை மூவாயிரத்தை தொடும் என்கிறார்கள்.
முதலில் எந்திரன் இசை வெளியீட்டு விழாவை துபாயில் நடத்த திட்டமிட்டிருந்தனர். தற்போது துபாயை தவிர்த்து மலேசியாவை தேர்வு செய்திருக்கிறர்கள். தமிழக ரசிகர்களை கவர இங்கேயும் ஒரு ஆடியோ வெளியீட்டு விழா நடத்தப்படுமாம்.
சீக்கிரம் படத்தை ரிலீஸ் பண்ணுங்கப்பா.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.