மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இயக்குனரை முத்தமிட்டு நெகிழ்ந்த ர‌ஜினி.

விட்டால் எந்திரனையே இந்த சின்ன மைனா தூக்கி‌ச் சாப்பிடும்போல. அந்தளவுக்கு பிரபுசாலமனின் மைனா அனைவர் மனதிலும் நங்கூரம் பாய்ச்சியிருக்கிறது.

மைனாவை பார்த்த பாலா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலேயே மனதார பாராட்டினார். அவரைப் போலவே கமலும். ர‌ஜினிக்கு மைனாவை தனியாக போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்துவிட்டடு வெளியே வந்தவர் இயக்குனர் பிரபுசாலமனை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமழை பொழிந்திருக்கிறார். அத்துடன் இந்தப் படத்தில் நான் நடித்திருந்தால் அது எனக்கு பெருமையாக இருந்திருக்கும் என நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.

அதேபோல் இயக்குனர் பாலா தனது அலுவலகத்துக்கு மைனா டீமை வரவழைத்து விருந்து கொடுத்திருக்கிறார்.

லிங்குசாமியின் விருந்து தனிவகை. பிரபுசாலமனின் அடுத்தப் படத்தை இவர்தான் தயா‌ரிக்கிறார். பட்ஜெட் ஆறு கோடி என்கிறார்கள். ம்... மெகா விருந்துதான்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.